Endangered archives blog

News about the projects saving vulnerable material from around the world

24 October 2017

Training at Jaffna Protestant Archives

Today I received a post from Henria Aton and the team working on the Jaffna Protestant digital archive project (EAP835). This is the first time we have had a bilingual blog post and we think it is a really super idea.

Group photograph of the Training Programme studentsTraining Programme students with Dr. T. Sanathanan, Chair of the University of Jaffna Fine Arts department.

We asked our five EAP835 Jaffna Protestant Digital Archive interns to reflect on their experiences with the digitisation training program held in May 2017, and on their work as digitisation interns from June to July 2017. During the training programme, they and fourteen other students and professionals from Jaffna received theoretical and practical training in historiography, preservation, and digitisation. The internship programme consisted of 50 hours of digitisation, participation in the development of a preservation pamphlet based on locally-available resources, and a visit to local churches to talk about the project and disseminate our call for materials to Protestant families. As of the end of pilot project EAP835 (now major grant EAP971), all five have successfully finished their internships. Below are the interns' blog entries in their original Tamil, followed by English translations produced by our team.

Three women digitise part of the archive.Programme Coordinator Kirubalini Packiyanathan teaching interns Thiviya and Mirusha.

Kamalanathan Thiviya

ஆசியாவிலேயே மிகப்பெரியதும் சிறந்ததுமான பல பழைய ஆவணங்களினைப் பேணி வைத்திருந்த நூலகத்திற்க்கு சொந்தமானவர்கள் இலங்கைத்தமிழர். போரின் இன்னல்களின் மத்தியிலும் பழமையான ஆவணங்களை அரிய பொக்கிஷமாக தமது வீடுகளில் பாதுகாத்து வருகின்றனர். இதனை கண்டறிந்து அவற்றினை தொகுத்து எண்ணியமாக்கலின் மூலம் நீண்ட ஆயுளுடன் அனைவரது பாவனைக்கு கொண்டு செல்ல முயலும் புரட்டஸ்தாந்து எண்ணிம ஆவணத்தின் பயிற்சி திட்டத்தில் பங்கெடுக்க கிடைத்த வாய்ப்பு பெரும் மகிழ்வை தருகின்றது. இதனை அறிமுகப்படுத்தி வாய்ப்பளித்த இறையியல் கல்லூரிக்கு எனது நன்றிகள்.

 எம் மத்தியில் இன்றளவும் எங்களில் பலரால் பாரம்பரிய ஆவணங்களுக்கான முக்கியத்துவமும் உணரப்படாமலேயே உள்ளமை வருத்தம் அளிக்கிறது. சமூகத்தின் இன் நிலைக்கு நாமும் பொறுப்பாளிகள் எனும் விழிப்புணர்வை  இச்செயற் திட்டம் உணர்த்தி உள்ளது. சமூகத்தின் மன ஓட்டத்தினையும் அறியும் வாய்ப்பும் கிடைத்தது. ஆவணங்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு எம் சமூகத்திற்கு அவசியமான ஒன்றாகும். இனிவரும் காலங்களிலேனும் புரட்டஸ்தாந்து சமூக ஆவணங்களைப் போல் எமது ஏனைய சமூகத்தினது ஆவணங்களுக்குமான தேடலும் அவசியம் எனும் எண்ணம் விதைக்கபட்டுள்ளது. வாய்பளித்து வழிகாட்டிய அனைவருக்கும் நன்றிகள்.

Sri Lankan Tamils once had the largest and best library in South Asia, which contained many ancient documents. Throughout the many hardships of wartime, Jaffna Tamils preserved their old documents in their homes like rare treasures. Identifying these materials and digitising them enables public access and ensures their longevity.

I am very grateful for the opportunity to participate in the Jaffna Protestant Digital Library’s valuable Training Programme. I would like to thank the Christian Theological Seminary for introducing me to EAP835 and giving me the opportunity to attend the programme. 

I worry that today, many of us do not realize the significance of historical documents. Through EAP835, I realized how our society thinks about historical materials and how we are all responsible for this tragic lack of awareness. Knowledge about document preservation is essential for the community. Now, the idea of identifying and preserving other community’s materials, like the Protestant documents, has been sown.

Thiviya is librarian of the Christian Theological Seminary Library in Maruthanamadam, Jaffna.

Neetha receiving her training program completion certificate.U.L. Iffath NeethaNeetha receiving her training program completion certificate.

U.L. Iffath Neetha

EAP835 குறிப்பிட்ட ஒரு பகுதியை ஆவண முயற்சியாக கொண்டுள்ள அதே வேளை இலங்கையில் ஆவணப்படுத்த வேண்டிய பகுதிகளுக்கு முதற் களமாக இவ் நிகழ்ச்சித்திட்டம் அமையப்பெற்றுள்ளது. ஆவணங்களைப் பாதுகாத்தல் என்பது ஒரு வகையில் வரலாறுகளை, வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாத்தலாகவும் காணப்படுகின்றது. இவற்றினை பாதுகாத்தல் என்பது தற்கால தேவையாக உள்ளதுடன் அதனை செயற்படுத்தும் செயற்திட்டமாகவே காணப்படுகின்றது.

நான் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருக்கும் நிலையில் இப்பயிற்சித்திட்டத்தில் கலந்து கொண்ட போது, முஸ்லிம்கள் தொடர்பாக வரலாற்று எழுத்தாதாரங்கள், மரபுரிமைசார் விடயங்கள் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான எண்ணிமைப்படுத்தல் செயற்திட்டம் மூலம் எண்ணிமைப்படுத்த வேண்டும் என்று எனது ஆர்வத்தினை தூண்டலாயின. விரிவுரைகளிற்;கூடாக ஆவணங்கள், இவற்றினைப் பாதகாத்தல் பற்றி பயிற்சித்திட்டத்தினூடாக  அறிந்து கொள்ளமுடிந்ததுடன், புதியவகைமையான பாதுகாத்தல் செயற்பாடான எண்ணிமைப்படுத்துதல் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.  உள்ளீர்ப்பு வேலைத்திட்டத்தினூடாக அவற்றினை செயற்படுத்திப் பார்க்கவும் முடிந்தது. இதன் போது வழங்கப்பட்ட கையேடுகள் நிகழ்ச்சித்திட்டத்திற்குத் தேவையான விடயங்களினை உள்ளடக்கி இருப்பதுடன் அனைவரும் இலகுவில் விளங்கிக் கொள்ளும் வகையில் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

While EAP835 covers only a particular area, the programme is a first step for future digitisation on different subjects in Sri Lanka. The preservation of documents safeguards history and historical evidence. It is essential especially today, and this programme is implementing this necessity.

As a Muslim woman, the training programme inspired me because Muslim communities have many historical documents and legacies that would benefit from a similar digitisation programme. Through the training lectures, I learned about important documents, general preservation methods, and a new method of preservation: digitisation. The internship program then allowed me to practice what I learned. The digitisation manual provided for the training and internship programmes included all the necessary instructions for digitisation and was easy to follow.

Neetha was a Visiting Lecturer at the University of Jaffna before joining EAP835. She currently lives in Batticaloa, in Sri Lanka’s Eastern Province.

Luxsana explaining how to use our preservation sachets at St. John’s Church in NallurLuxsana explaining how to use our preservation sachets at St. John’s Church in Nallur

Balakumaran Luxsana

EAP835 செயற்திட்டம் அரிதான ஆவணங்களை பாதுகாப்பதனை நோக்கமாக கொண்ட  அரிய ஒரு செயற்திட்டம். இச்செயற்றிட்டம் எனது நூலகம்சார் தொழில்வாண்மைக்கு மிகவும் பயனுள்ளது.  இந்தச் செயற்திட்டம் மூலமாக

அறிவு சார் தகவல்கள், புதிய அனுபவங்கள், ஆக்கப்பூர்வமான  ஆர்வமிக்க செயற்பாடுகள்  போன்ற பல விடயங்களினைப் பெற்றுக்கொண்டேன். விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள் மூலம் எண்ணிமப்படுத்தல் பற்றி கற்றுக்கொண்டேன். உள்ளீர்ப்பு வேலைத்திட்டத்தில் பங்குபற்றியதோடு 50மணித்தியாலங்கள் எண்ணிமப்படுத்தல் வேலையிலும் ஈடுபட்டுள்ளேன். இது எனது தொழில்வாண்மைசார் விருத்திக்கு பங்களிக்கத்தக்கது.

 சமூகத்துக்குச் செயற்றிட்டம் பற்றிய தகவல்களினை வழங்குதல் எனக்கு விருப்பமானதே  இருப்பினும் பாடசாலை, தேவாலயங்கள் போன்ற பொதுமக்கள் கூடுமிடங்களில் இவ்வாறான நடவடிக்கைகளினைச் செய்வதற்க்கே நான் விரும்புகிறேன்.

 அனைவரும் வாசித்து இலகுவாகப் புரியத்தக்க எளிமையான மொழிநடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் எல்லா மக்களும் வாசித்து பயன் பெறக்கூடிய கையேடாக ஆவணங்களினைப் பாதுகாத்தல் தொடர்பான கையேடு அமைந்துள்ளதாக நான் நினைக்கிறேன்

EAP835 is a rare project in Jaffna. Its purpose is preserving unique documents, which is very useful to me as a library professional. I obtained information on many matters through the project, such as: knowledge of information practices, new experiences, and creative work. In particular, I learned about digitisation through theory and practice. I participated in the internship programme and completed 50 hours of digitisation work that contributed to my professional development.

I also enjoyed disseminating information about the project to the community, and I wish to do more work in schools, churches, community centres, etc. I think the preservation pamphlet is especially useful because it is designed simply and the language is accessible, so people are able to understand the message very quickly.

Luxsana was recently appointed Temporary Lecturer at the University of Jaffna’s political science department.

Tharmapalan Tilaxan

வரலாறுகளைப் பாதுகாத்தல் மற்றும் அது தொடர்பாக தெளிவுபடுத்துதல் என்பது ஒரு சமூகத்திற்கு மிக முக்கியமான ஒன்று. இச் செயற்திட்டம்அந்தப் பங்கினைச் செய்கின்றது என்னும் பொழுது நிச்சயம் இன்றைய சமூகத்திற்குத் தேவையான ஒரு செயற்திட்டம் தான்.  

 பயிற்சித்திட்டம் மிகவும் பயனுள்ள ஒன்றாகக் காணப்பட்டது. திறமையான விரிவுரைகள், சரியான நெறிப்படுத்தல் என்பவற்றுடன எண்ணிம ஆவணகாப்பகம் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியாதகக் காணப்பட்டது. பயிற்சிக் காலத்தில்  பெற்றுக்கொண்ட தகவல்கள் மற்றும் அனுபவங்களைக்  கொண்டு உள்ளீர்ப்பு வேலையில் இலகுவாகச் செயற்படக்கூடியதாக இருந்தது. இதனூடாக நிறையப் பழமையான ஆவணங்களைத் தொட்டு உணரக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது.

 பிரச்சாரம் செய்தல் மிகவும் பிடிக்கும் ஆனால் வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்வதில் உடன்பாடு கிடையாது. காரணம் இன்றைய சமுகம் வீடுவீடாக சென்று செய்யும் நிறைய எதிர்மறையான மற்றும் தவறான பிரச்சாரங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் தாக்கம் எங்களிடம் திருப்பி காட்டப்படுகின்றது. மற்றும் பிராச்சாரம் செய்ய சரியான இடத்தினையும் அடையாளம் கண்டுகொண்டு செய்தால் எமது செயற்திட்டத்திற்கு வெற்றியாக அமையும்.    

 பாதுகாப்பு கையேடு மிகவும் தேவைப்பாடான ஒன்று. ஆவணங்களைப் பாதுகாத்தல் தொடர்பான விளக்கங்களைத் தெளிவுபடுத்த இலகுவாகக் காணப்படுகின்றது.

 Preserving history and conveying its importance to the next generation is one of the most important things a society can do. The EAP835 project is undertaking work that is necessary for today’s society. I felt the training programme was very useful. I gained knowledge of digital archives through excellent lectures and effective coaching during the training. Thanks to this, working for the project during  the internship  was very easy. I also had the rare opportunity to be in contact with old documents through EAP835.

I enjoyed the dissemination parts of the project but the door-to-door campaign less so, as Jaffna society isn’t receptive to this method. Our project will be more successful with a different strategy for disseminating information. Finally, the preservation pamphlet is critical for explaining to the community how documents should be kept.

 Tilaxan regularly contributes to the Jaffna Protestant Digital Archive both as a digitizer and photographer.          

  Mirusha promotes the EAP project with a church-goer (there are many brochures on the table).Mirusha with a church-goer at the church in Manipay. 

Kumarakulasingham Mirusha

பன்னிரண்டு நாட்கள் கொண்டதாக ஒழுங்கமைக்கப்பட்ட இப்பயிற்சித்திட்டத்தில் இணைந்து கொண்டதன் ஊடாக எண்ணிமப்படுத்தல் பயிற்சியாளராக இணைந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது.

காலத்தின் தேவையில் இலங்கையில் மட்டுமன்றி அசாதாரணமான சூழ்நிலை கொண்ட நாடுகளுக்கும் இது அவசியமான செயற்பாடு ஆகும். இதில் இணைந்ததன் ஊடாக சிதைவுநிலையிலிருக்கும் முக்கியமான ஆவணங்களை எண்ணிமப்படுத்துவதன் அவசியம், அவ்வாறான ஆவணங்களை எவ்வாறு கையாளுதல் மற்றும் பாதுகாத்தல், மிசனரிகளின் வருகை, புராதன யாழ்ப்பாண வரலாறு போன்ற விடயங்களை அறியமுடிந்தது. எண்ணிம உபகரணங்களைக் கையாள்வதற்கான சந்தர்ப்பமும் கிடைத்ததோடு எண்ணிம ஆவணகச் செயன்முறையையும் கற்றுக்கொண்டேன்

 எண்ணிமப்படுத்தல் மிகவும் முக்கியமானதும், தேவையானதுமான செயற்பாடு ஆகும் ஏனெனில் எமது ஆவணங்களினை எதிர்காலச் சந்ததியுடன் பகிர்ந்துகொள்வதற்கான வாயிலாகும். ஆவணங்களை எண்ணிமப்படுத்துவதன் அவசியம் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று.  இதனை மற்றவர்களுக்கும் தெரிவிப்பதற்க்கும் என் அனுபவங்களினை சமூகத்துடன் பகிர்ந்துகொள்வதற்க்கும் ஆர்வமாக உள்ளேன்.

ஆவணங்களினைத் தேடி வீடு வீடாகச் சென்று மக்களினைச் சந்தித்தல் மூலம் சமூகத்தின் பொதுவான சிந்தனைமுறையினால் ஆவணங்களினைச் சேகரித்தலில் உள்ள சவால்களினைப்

புரிந்துகொண்டேன்.

Through the twelve-day Training Programme, I received the opportunity to work with EAP835 as a digitisation intern. Digitization is an essential activity not only in Sri Lanka, but in any country that has lived through unusual situations.

By working with EAP835, I have realized the importance of digitising fragile documents and learned how to handle and preserve them. Additionally, I have learned about missionary history, Jaffna history, and I have had the opportunity to handle digitization equipment and learn the digital archive process.

Digitisation is an important and essential activity because it is a window to share our documents with future generations. Everyone should be aware of its significance, and I am eager to talk about digitization with others and share my experience with the community. Through our church visits and door-to-door campaign, I have already learned the challenges of collecting materials due to the community’s general thinking.

Mirusha now works as a full-time  for EAP971.

Tilaxan and Kirubalini stand by the entrance to St. John’s Church, handing out pamphlets.Tilaxan and Kirubalini distributing preservation pamphlets to church-goers at St. John’s Church.

Luxsana talks to a woman outside her bungalow.Luxsana collecting contact information from community members during the door-to-door campaign.

.